மன்னார்குடி அருகே 3 பேர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி

மன்னார்குடி மேல்மருதூரை சேர்ந்த பழனியப்பன் மற்றும் அமிர்தவள்ளி இருவரும் 2013-ஆம் ஆண்டு காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட இருவரும் திருப்பூரில் குடியேறினர். குடும்பத்தினர் மன்னித்து விடுவர் என்று கருதி குழந்தையுடன் சொந்த ஊர் சென்றனர். மேல்மருதூர் வந்த தம்பதி, பிறந்து 40 நாளே ஆன குழந்தை ஆகியோர் வெட்டி படுகொலை கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது

சிவசுப்பிரமணியம் என்பவருக்கு 37 ஆண்டுகள், துரைராஜ் மற்றும் ராமகிருஷ்ணனுக்கு தலா 30 ஆண்டுகள், மகேந்திரன் என்பவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

நன்னடத்தை மற்றும் தலைவர்கள் பிறந்தநாளுக்காக விடுதலை செய்யப்படுவோர் பட்டியலில் 4 பேரையும் சேர்க்கக்கூடாது என்று தஞ்சை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.