மானிய விலை ஸ்கூட்டர்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

சென்னை:
மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க பிப்.10-ம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப் பட்டுள்ளது.

மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க பிப்.10-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் விண்ணப்பங்கள் பெற அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஒரு லட்சம் இலக்கை எட்டாததால் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் (25,000) வழங்கப்படும் என அ.தி.மு.க அறிவித்தது. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்து, ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் இத்திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தது.

முதல் கட்டமாக ஒரு லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்காக, கடந்த மாதம் 22-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுவந்தன. அரசின் இந்த அறிவிப்புக்கு பெண்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்தனர். விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்ததால், நேற்று மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

கடைசி நாளானதால், பலருக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், தற்போது இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 5 நாள்கள் நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டது.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.