பற்றி எரிந்த தலமரம்! திருவாலங்காட்டைச் சுற்றிக் கிளம்பும் சதி வேலைகள்?

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் புகார் பெட்டி

திருவாலங்காடு வடவாரண்யேஸ்வரர் திருக் கோவில் தல விருட்சம் புதன்கிழமை நேற்று இரவு திடீரென தீப் பற்றி எரிந்தது. இது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கடந்த வாரம் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் கிழக்குப் பகுதியில் கடைகளில் தீப் பற்றி விபத்து ஏற்பட்டது. இந்த அதிர்ச்சி நீங்குவதற்குள், நடராஜரின் பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் உள்ள தலமரம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கிறிஸ்துவ பிரசாரம் திட்டமிட்டு மேற்கொள்ளப் படுவதும், ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அவர்களைத் துரத்தியடிப்பதுமான சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

திருவலாங்காடு கோவில் மட்டும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை கடந்த சில நாட்களாக கிறிஸ்துவ மதமாற்றுக் கும்பல் குறிவைத்து வருவதாகக் கூறப்படுகிறது. அண்மையில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து ஜபக் கூடம் கட்டும் முயற்சி மேற்கொள்ளப் பட்டதாகவும், ஊர் இந்துக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அது கை விடப் பட்டதாகவும் ஊர் மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தோறும் கிறிஸ்துவ மத மாற்றுக் கும்பல் கோவில் வாசலில் நின்றுகொண்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கிறஸ்துவ மதப் பிரசுரங்களை அளித்து வருகிறதாம். கடந்த ஜனவரி மாதம் இதே போல் ஒரு ஞாயிற்றுக்கிழமை கோயில் முன் கூடி மதமாற்ற நோட்டீஸ்களைக் கொடுத்த கும்பலை ஊர் மக்கள் ஒன்று கூடி விரட்டியுள்ளனர்.

இந்நிலையில், கோயிலில் இரவு நேரத்தில் திடீரென தல விருட்சம் தீப்பற்றி எரிந்தது, சதியா அல்லது வேறு ஏதேனும் பழி வாங்கும் நடவடிக்கையா என்று ஊர் மக்கள் கோபத்தில் கொந்தளித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.