லஞ்சத்தில் ஜீவிக்கும் குமரி தேவசம் போர்டு: கோயில் கடையை அகற்றாமலிருக்க லட்சங்களில் பேரம்?!

உள்ளூர் செய்திகள் நெல்லை புகார் பெட்டி பொது தகவல்கள்

கன்னியாகுமரி:
குமரி தேவசம் போர்டு லஞ்ச லாவண்யத்தில் சிக்கிக் கிடப்பதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். திருக் கோவில்களின் பாதுகாப்பு கருதியும் கோவிலின் அமைதி, புனிதம் இவற்றைக் கருதியும் உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், தமிழக முதல்வர் கோவிலில் உள்ளே உள்ள அனைத்து கடைகளையும் உடனே அகற்ற உத்தரவிட்டார். ஆனால் இது தொடர்பில் குமரி மாவட்ட கோவில்களில் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

இது குறித்து தகவல் கிடைத்ததால், இந்து அமைப்புகளைச் சேர்ந்த பக்தர்கள் விசாரித்தனர். அப்போது, மிகப் பெரிய அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன.

சுசீந்திரம் தேவசம் அலுவலகத்தில் வேலை பார்கும் ஜீவா என்பவர், கடை உரிமையாளர்களிடம் கடைகளை மாற்றாமல் இருக்க நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் ஒரு கடைக்கு தலா ரூ.3 லட்சம் முதல் 5 லட்சம் வரை கொடுங்கள் என்று பேரம் பேசி வருகின்றாராம். இதற்கு இணை ஆணையர் அன்புமணி ஓகே சொன்னதாகவும் தகவல் கூறப்பட்டது.

இதை கவனத்தில் கொண்டு ஆலயங்களை கொள்ளைக்கார வியாபரிகளிடம் இருந்து மீட்கவும், ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்து அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.