தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கருத்து தொடர்பில் ரஜினிக்கு சம்மன்!

சற்றுமுன் தமிழகம் நெல்லை
rajini - 2026

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தெரிவித்த கருத்து குறித்து விளக்கம் அளிப்பதற்காக ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களுடன் சமூக விரோதிகளும் கலந்து போராட்டத்தை வன்முறைப் பாதைக்குத் திரும்பினர். தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. உயிரிழப்புகள் ஒருபுறம், காயமடைந்தவர்கள் மறுபுறம் என தூத்துக்குடி ரணகளமானது.

இந்நிலையில் தூத்துக்குடியில் காயம் பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டவர்களைப் பார்த்து ஆறுதல் கூற வந்த ரஜினி, பின்னர் அந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ரஜினி காந்த், சமூகவிரோதிகள் தூண்டுவிட்டு இந்தப் போராட்டம் நடந்ததுஎன்றார்.

இந்நிலையில், ரஜினிகாந்த் அவ்வாறு சொன்னார் என்றால், அவருக்கு சமூக விரோதிகள் யார் என்றும் தெரிந்திருக்கும், எனவே அது குறித்து அவரிடம் விசாரிக்க வேண்டும் என்று சிலர் புகார் அளித்தனர். இதை அடுத்து, வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு இடப் பட்டிருக்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம்தர அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.