
பதிமூன்று வருடத்துக்குப் பின் சினிமாவுக்கு வந்தாலும் தான் நடித்த படத்தை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கு நடிகை விஜயசாந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழில், கல்லுக்குள் ஈரம், நெற்றிக்கண், தடயம், ராஜஸ்தான், வைஜெயந்தி ஐ.பி.எஸ். உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் விஜயசாந்தி.
தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் முன்னணி ஹீரோயினாக இருந்த இவர், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார்.

பின்னர் ஆந்திராவில் அரசியலில் ஈடுபட்ட அவர், சினிமாவை ஒதுக்கி வைத்தார். 13 வருடங்களாக நடிக்காமல் இருந்த அவர், மீண்டும் நடிக்க வந்தார். மகேஷ் பாபு நடித்துள்ள சரிலேரு நீக்கவேரு என்ற தெலுங்கு படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்தார். அவர் மீண்டும் நடிக்க வந்தது அவரது ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.
அனில் ரவிபுடி இயக்கிய இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின். பிரகாஷ்ராஜ், ரோகிணி உட்பட பலர் நடித்துள்ளனர். நடிகை தமன்னா ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜனவரி 11 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகி ஹிட்டானது. இதையடுத்து படத்தின் ஹீரோ மகேஷ்பாபு, அமெரிக்காவுக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார், விஜயசாந்தி. இதுபற்றி ட்விட்டரில் தெலுங்கில் எழுதியுள்ள அவர், எப்போதும் என்னை ஆதரித்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு நன்றி. என்னை மீண்டும் சினிமாவுக்கு அழைத்துவந்த இயக்குனர் அனில் ரவிபுடி, ஹீரோ மகேஷ்பாபு ஆகியோருக்கு நன்றி.

தமிழில் கல்லுக்குள் ஈரம் படத்தில் 1979 ஆம் ஆண்டு அறிமுகமானேன். தெலுங்கில் கில்லாடி கிருஷ்ணுடு படம் மூலம் அறிமுகமானேன். அப்போதிருந்து இப்போது வரை எனது சினிமா வாழ்க்கையில் பங்களித்த அனைவருக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.
இதை ஏராளமானோர் ரீவிட் செய்துள்ளனர். மீண்டும் நடிப்பது பற்றி அவர் கூறும்போது, நேரம் அனுமதித்தால் அதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் நடித்து கடந்த மாதம் வெளியான பிக்பிரதர் படத்திலும் விஜயசாந்தி நடித்திருந்தார்.
#సరిలేరు_మీకెవ్వరు ఇంత గొప్ప విజయాన్ని నాకు అందించిన, నన్ను ఎల్లప్పుడూ ఆదరిస్తూ వస్తున్న ప్రేక్షకులకు, అభిమానులకు మనస్ఫూర్తిగా ధన్యవాదములు
— VijayashanthiOfficial (@vijayashanthi_m) February 2, 2020
నా నట ప్రస్ధానానికి 1979 కళ్ళుకుల్ ఇరమ్,కిలాడి కృష్ణుడు నుండి నేటి 2020 సరిలేరునీకెవ్వరు వరకు ఆగౌరవాన్ని అందించిన ప్రతిఒక్కరికి కృతజ్ఞతలు.



