


இராஜபாளையம் சேத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சேத்தூர் மற்றும் தளவாய்புரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டு நடைபெறுவதாக காவல் நிலையத்தில் புகார் வந்துள்ளது .
குறிப்பாக டிவிஎஸ் ஹெவி ட்யூட்டி இருசக்கர வாகனங்கள் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வந்த நிலையில் சேத்தூர் காவல் நிலைய போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர் .
சேத்தூர் தென்காசி சாலையில் வாகன சோதனை ஈடுபட்ட காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமாக வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் காவல்துறையிடம் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார் போலீசார் தீவிர விசாரணை ஈடுபட்டபோது இருசக்கர வாகனத்தை திருடி வந்துள்ளது தெரியவந்துள்ளது தொடர்ந்து விசாரணை செய்ததில் தளவாய்புரம் கவனத்திற்கு உட்பட்ட 3 இருசக்கர வாகனங்களும் சேத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட 5 இருசக்கர வாகனங்களும் திருடப்பட்டது தெரியவந்தது.
தொடர் விசாரணையில் கோவில் ஒரு பகுதியைச் சேர்ந்த சமுத்திரம் மகன் ஆனந்த செல்வம் வயது 24 மாங்குடி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வெயிமுத்து வயது 21 .மாங்குடி பகுதி சேர்ந்த அய்யர் மகன் சித்திரக்கனி வயது 44 இவர்கள் மூன்று பேரும் இருசக்கர வாகனங்களை திருடி விற்றுவது தெரிய வந்தது.
திருடப்பட்ட 8 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி இவர்கள் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தினர்