2 மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்தில் மீனவர்கள்; கமல் பேசியதோ 2 நிமிடங்கள்!

Published:

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரத்தில் மீனவர்களுடன் நடிகர் கமல் சந்திப்பு நடைபெற்றது. அவர்கள் மத்தியில் பேசிய கமல், வாக்குறுதிகளை ஆட்சியாளர்கள் நிறைவேற்றுவதில்லை என்று குற்றம் சாட்டினார்.

கமலிடம் மனுக்களை அளிக்க ஏராளமான மீனவர்கள் காத்திருந்தனர். 2 நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு புறப்பட்டு சென்றதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மீனவர்களிடம் 2 நிமிடங்கள் மட்டுமே கமல் பேசிவிட்டு உடனே சென்றதால், தங்கள் குறைகளைக் கூறமுடியாத மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கமலிடம் மனுக்களை அளிக்க ஏராளமான மீனவர்கள் காத்திருந்தனர். ஆனால், மீனவர்களிடயே 2 நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு புறப்பட்டுச் சென்றார் கமல். மீண்டும் வேறு ஒரு நாளில் வந்து மீனவர்களுடன் கலந்துரையாடுவதாக கூறிவிட்டுச் சென்றார் கமல். இதனால், தங்கள் குறைகளை கமலிடம் கூறலாம் என்று காத்திருந்த மீனவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

முன்னதாக, ராமேஸ்வரத்தில் மீனவர்களுடனான சந்திப்பு இடத்தில் கலை நிகழ்ச்சி, விடுதியில் இருந்து புறப்பட்ட பின்னர் ராமேஸ்வரம் கணேஷ் மஹாலில் மீனவர்களை சந்தித்து கமல் பேசுவார் என்று கூறப் பட்டது. இதனால் ராமேஸ்வரம் கணேஷ் மகாலில் மீனவர்களை சந்திக்கும் இடத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டு, அந்த இடம் உற்சாகமாக இருந்தது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

அதற்கு முன்னதாக, இன்று காலை கலாம் இல்லத்துக்கு வந்த கமல், அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த அப்துல் கலாமின் பேரன் சலீம், கலாம் இல்லத்துக்கு பல்வேறு தலைவர்கள் வந்து சென்றதுபோல கமல்ஹாசனும் வந்து ஆசி பெற்றுச்சென்றார்.

அப்துல் கலாம் வீட்டுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், முதலமைச்சர்களும் வந்து செல்வது வழக்கம். அதுபோல், கமல்ஹாசனும் வந்து ஆசி பெற்றுச் சென்றார் என்று கூறினார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img