சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த மேலும் இருவர் பலியாகினர்.பலி எண்ணிக்கை நான்கானது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கனஞ்சாம்பட்டியில் சிவகாசி சேர்ந்த மாயக்கண்ணன் என்பவரின் பேபி பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இதனை விஸ்வநத்தத்தை சேர்ந்த கந்தசாமி என்பவர் நடத்தி வருகிறார். மேலும் இது நாக்பூர் உரிமம் பெற்று சுமார் 70 க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் பேன்சி ரக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வியாழக்கிழமை பணியில் ஈடுபட்ட போது மூலப்பொருள் உராய்வினால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது இந்த வெடி விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் மேலும் இடிபாடுகளில் சிக்கி சத்திரப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி என்ற பெண் மற்றும் ஒரு ஆண் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்தில் சிவகாசி வெம்பக்கோட்டை சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 தீயணைப்பு படை வீரர்கள் இடிபாடுகளில் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு பேர் பலியான சம்பவம் குறித்து விபத்து நடந்த தேவி பட்டாசு தொழிற்சாலையை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் நேரில் ஆய்வு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வட மாநிலத்தை சேர்ந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிவசங்குபட்டியில் குருநாதன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த14 .1 .23 அன்று வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த ராம்பால்ஆஜி (25),சந்தீப்குமார்(24),வினோத்ராம்பால்(25) பேர் காயம் அடைந்து.மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ராம்பால்,
சந்தீப்குமார் ஆகியோர் வெள்ளி கிழமை உயிரிழந்துள்ளனர். வினோத்ராம்பால் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.பலிஎண்ணிக்கை நான்கானது.