பி.ஏ .சி . ராமசாமி ராஜா தொழில் நுட்பக் கல்லூரி, ராஜபாளையம்
60 வது ஆண்டு விழா நடைபெற்றது.
ராஜபாளையம் பி.ஏ .சி . ராமசாமி ராஜா தொழில் நுட்பக் கல்லூரியின் 60 வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி தாளாளர் என் .கே . ஸ்ரீ கண்டன் ராஜா அவர்கள் தலைமை வகித்தார். ராம்கோ கல்வி குழுமங்களின் முதன்மை கல்வி அதிகாரி டாக்டர் ஆர். வெங்கட்ராஜ் வரவேற்புரையும், கல்லூரியின் ஆண்டு அறிக்கையை கல்லூரி முதல்வர் டாக்டர் வீ . சீனிவாசன் சமர்பித்தார்.
மாணவர் தலைவர் ஜி. நிர்தேவ் குமார், மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவு இந்த ஆண்டு மாணவர் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக சதர்ன் ரயில்வே மதுரை கோட்ட பொது மேலாளர் பி . ஆனந்த் அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றுகளும், பரிசுகளும் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் இக்கல்லூரியின் முன்னாள் மாணவரும் சதர்ன் ரயில்வே மதுரை கோட்ட மூத்த முதுநிலை பொறியாளருமான பி . வில்லியம் ஜாய், கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், ராம்கோ குழுமத்தை சேர்ந்த கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
விழா முடிவில் மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர் செயலாளர் எல். பாஸ்கர் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் (ஆர்&ஏசி) பிரிவு நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சிறப்பாக செய்து இருந்தனர் .