அம்பையில் கைதி தப்பி ஓட்டம்

உள்ளூர் செய்திகள்

Crime-Pix நெல்லை ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வெள்ள பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுக நயினார் (வயது 28). இவரை ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்கு தொடர்பாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு ஒரு வேனில் அழைத்து வந்தனர். அவருடன் பாதுகாப்புக்காக 2 போலீசார் வந்தனர். நீதிமன்ற வளாகத்திற்குள் சென்ற போது, திடீரென்று ஆறுமுக நயினார் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார். தப்பி ஓடிய கைதியை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.