ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட 50 பேர் வேட்பு மனு தாக்கல்

Published:

திருச்சி/ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் தொகுதி  இடைத்தேர்தலில் போட்டியிட 50 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு  தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. தி.மு.க., சார்பில் ஆனந்தும், அ.தி.மு.க., சார்பில் வளர்மதியும் போட்டியிடுகின்றனர். மேலும் இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். பா.ஜ.க, சார்பில் போட்டியிட அதன் மாநில  துணைத் தலைவர், வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவர் மீது வழக்கு இருப்பதாக, புகார் கிளம்பிய நிலையில், அவருக்கு மாற்று வேட்பாளராக, மாநகர்  மாவட்ட தலைவர் பார்த்திபன் மனு தாக்கல் செய்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img