புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே அம்பலவாணனேந்தல் கிராமத்தில் பழமையான பால தண்டாயுதபாணி கோயில் உ்ளளது இக்கோயிலில் திருப்பணி நிறைவுற்று நவக்கிரங்களும் தனி சன்னதி அமைத்து யாகவேள்வி தொடங்கியது யாகவேள்வியில் ஆறு கால பூஜைக்குபின் யாகத்தில் வைத்தகடங்கள் புறப்பட்டு கோபுரத்தை அடைந்து கலசத்தில் கும்ப அபிஷேகம் நடந்தது இதில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை பார்க்கவகுல மகா ஜனங்கள் செய்தனர் சர்வசாதக பணிகளை ஆவுடையார்கோயில் பப்பு சாஸ்திரிகள் செய்தனர்.