December 5, 2025, 6:42 PM
26.7 C
Chennai

தேனி பொம்மிநாயக்கன்பட்டியில் இஸ்லாமிய வெறியர்களின் தாக்குதலைக் கண்டித்து மே 12ல் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம்!

bomminayakkanpatti theni1 - 2025

தேனி பொம்மிநாயக்கன்பட்டியில் இஸ்லாமிய வெறியர்கள் இந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்களின் வீடுகள் கடைகள் வாகனங்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவத்தைக் கண்டித்து மே 12ல் இந்து முன்னணி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்துமுன்னணி இன்று வெளியிட்ட அறிவிப்பில்,

தேனி பொம்மிநாயக்கன்பட்டியில், இந்து தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மீது முஸ்லீம்கள் திட்டமிட்டு நடத்திய தாக்குதலைக் கண்டித்து மே 12ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை இந்து முன்னணி நடத்துகிறது..

தேனி பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் கடந்த மே 4ஆம் தேதி ஒரு மூதாட்டி இறந்தார். அந்த சவ ஊர்வலம் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பொது வீதி வழியாக செல்ல முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பிறகு காவல்துறை தலையிட்டு அந்த சவ ஊர்வலத்தை நடத்திச் சென்றனர்.

bomminayakkanpatti theni2 - 2025

அடுத்த நாள் மே 5ஆம் தேதி வெளியூரிலிருந்து அழைத்து வரப்பட்ட ஆயிரக் கணக்கான முஸ்லீம் மத வெறியர்கள், தாழ்த்தப்பட்ட இந்து சமுதாயத்தினர் வீடுகள், கடைகள், வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். காவல் துறையினர் கண் முன்னே கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்து தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் சவ ஊர்வலம் பொது வீதியில் செல்வதை தடுத்ததும், திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதும் காட்டுமிராண்டித்தனமான செயல்.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அதிகமானால் என்ன நடக்கும் என்பது கடந்த சில மாதங்களாக தமிழகம் நேரடியாக அனுபவித்து வருகிறது. ஆனால், காவல்துறை முஸ்லீம்களை திருப்திப்படுத்த இரண்டு பக்கமும் வழக்குப்பதிவு செய்து, வன்முறையைக் கண்டித்து புகார் கொடுத்த இந்துக்களை கைது செய்துள்ளனர். இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

bomminayakkanpatti14 - 2025

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவராகிய நான், அந்த ஊருக்கு, நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களிடம் கேட்டறிந்ததில், பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளன.

இந்த கிராமத்தில் 1200 இஸ்லாமிய குடும்பங்களும், 400 இந்து குடும்பங்களும் வசிக்கின்றனர். முஸ்லீம்கள் அந்த கிராமத்தையே தனி பாகிஸ்தான் போல ஆக்கிரமிக்க திட்டமிட்டு பல சதி செயல்களை செய்து வந்துள்ளனர்.

பொம்மிநாயக்கன்பட்டி என்று நெடுங்காலமாக இருக்கும் பெயரை துலுக்கப்பட்டி என்று மாற்ற முயற்சித்து வருகின்றனர். அரசு பள்ளியை ஆக்கிரமித்து அல்அமீன் இஸ்லாமிய மண்டபமாக மாற்றி தங்கள் நிர்வாகத்தின் கீழ் வைத்துக் கொண்டுள்ளனர்.

பெரியகுளம் அருள்மிகு சுப்ரமணியர் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, முஸ்லீம்கள் ஈத்கா மைதானமாக்கி தொழுகை நடத்தி வருகின்றனர். போலி ஆவணங்கள் மூலம் அந்த நிலத்தை ஆக்கிரமித்து, அங்கு மசூதி கட்டவும் முயற்சித்து வருகின்றனர்.

பஞ்சாயத்திற்கு சொந்தமான பொது தண்ணீரை மசூதிக்கும், தங்கள் தோட்டங்களுக்கும் குழாய் மூலம் சட்டவிரோதமாக எடுத்து வருகின்றனர்.
இதனை எதிர்த்து போராடும் இந்துக்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

அப்பாவி இந்துக்களை முஸ்லீமாக மதமாற அச்சுறுத்தி வருகின்றனர்.
இத்தகைய கொடூர செயலால் தாழ்த்தப்பட்ட இந்து சமுதாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.

தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காக அரசியல் நடத்துவதாக கூறும் திருமாவளவன், தமிழர்களின் தளபதியெனக் கூறிக்கொண்டு வலம் வரும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக வைகோ, சீமான், வேல்முருகன் உள்பட இருக்கும் சில்லரை கட்சிகளின் தலைவர்கள் உட்பட எந்த அரசியல் தலைவர்களும் இஸ்லாமியர்களின் வெறிச்செயலைக் கண்டிக்கவில்லை.

இந்து சமுதாயத்தின் எந்த ஒரு பிரிவினருக்கும் ஆபத்து ஏற்பட்டாலும், இந்து முன்னணி போராடும், நீதி கிடைக்க பாடுபடும்.

இந்துக்களை தாக்கியவர்கள் திட்டமிட்டு சதி செய்து கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார்கள். முஸ்லீம்கள் மீது கடும் நடவடிககை எடுக்க தமிழக காவல்துறை செயல் பட வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்களை சிறையில் அடைக்க வேண்டும். முஸ்லீம்களுக்கு உடந்தையாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்து சமுதாயம் பாதுகாப்போடு வாழ்வதற்கும், அவர்தம் உரிமையை நிலைநாட்டும் வகையிலும் தமிழக அரசு துரிதமாக செயல்பட இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இதனை வலியுறுத்தி, வருகின்ற மே 12ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டமானது நடைபெற இருக்கிறது.

இதில் அனைத்து சமுதாய நலன் கருதும் அமைப்புகளும், பொதுமக்களும் பெரும் திரளாக கலந்துகொள்ளமாறு இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது. – என்று  காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

4 COMMENTS

  1. இந்துக்கள் தாக்கப்படுவதினால் இந்துக்களை ஒன்றாக இனைக்கமுடியும், இஸ்லாமியர்கள் இச் செயளே அவர்களின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது

  2. Muslimgalukku edhiraaga eppodhum news thiriththu kooruvadhai vaadikkaiyaaga gondullana oodagagal enbadhu nam ellorukkum theriyum. Idhuve muslimgal baadhikkappattaal orusaaraar baadhikkappattaargal endrumattum ezhudhum…. Naam ellorum arindha ondrudhaan. Therindhum en kan moodikkondu nambugireergal.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories