நீட் தோல்விக்கு தீர்வு உயிரை மாய்ப்பதல்ல: டாக்டர் ராமதாஸ் கூறும் அறிவுரையைக் கேளுங்க…!

ramadoss - 2026

சென்னை: நீட் தேர்வுத் தோல்வியால் செஞ்சி மாணவி பிரதீபா விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீயும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,  மாணவி சுபஸ்ரீ மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாசு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், நீட் தோல்விக்கு தீர்வு உயிரை மாய்ப்பதல்ல என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்தபோது… மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிட வேண்டும் என்ற கனவுடன் இருந்த சுபஸ்ரீயால் நீட் தேர்வில் 24 மதிப்பெண் மட்டும் பெற்று தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியவில்லை. பல வினாக்களுக்கு சுபஸ்ரீ சரியான பதில் எழுதியிருந்த போதிலும், தவறான விடைகளுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதன் காரணமாக சுபஸ்ரீ தோல்வியடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. செஞ்சி மாணவி பிரதீபாவின் மறைவால் ஏற்பட்ட அதிர்ச்சியும், சோகமும் இன்னும் முழுமையாக தீராத நிலையில், சுபஸ்ரீயின் மறைவை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இத்தகைய தற்கொலைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

நீட் தேர்வு நடத்தப்படும் விதமும், அதற்கான பாடத்திட்டமும் தமிழக மாணவர்களுக்கு முற்றிலும் புதிதாகும். அதுமட்டுமின்றி, தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி எடுத்துக்கொண்டால் மட்டும் தான் இத்தேர்வில் வெற்றி பெற முடியும் எனும் சூழலில், அதற்கான வாய்ப்பு இல்லாத மாணவச் செல்வங்கள் தோல்வியடைவது இயல்பு தான். இதில் மாணவச் செல்வங்களின் தவறு எதுவும் இல்லை. அவ்வாறு இருக்கும் போது அதற்காக மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்து கொள்வது தேவையற்றது. இனியும் எந்த ஒரு மாணவரோ, மாணவியோ நீட் தோல்விக்காக உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

அதேநேரத்தில் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ என மாணவச் செல்வங்களை தொடர்ந்து பலி வாங்கி வரும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories