கோயில் நில ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை

madurai high court - 2026

மதுரை: கோயில் நில ஆக்கிரமிப்பை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

கோயில்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப் படுவது தொடர்பான வழக்கு விசாரணையின் போது கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, தமிழகத்தில் ஒரு அங்குல கோயில் நிலத்தை கூட ஆக்கிரமிக்கப் படுவதை அனுமதிக்க முடியாது என்றும், தமிழகத்தில் கோயில்களுக்குச் சொந்தமான 5 லட்சம் ஏக்கர் நிலம் விரைவில் மீட்கப்படும் என நம்புவதாகவும் கூறியது.

ஆக்கிரமிக்கப் பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்க அறநிலையத்துறை எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரிய விதத்தில் உள்ளதாகவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.