சேதமடைந்த கொள்ளிடம் பழைய பாலம் அகற்றப் படும்! அமைச்சர் உறுதி!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

kollidam bridge - 2026
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் சேதமடைந்த பழைய கொள்ளிடம் பாலம் இடித்து அகற்றப்படும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் பிரதான சாலையில், முன்னர் போக்குவரத்துக்கு பயன்பட்டது கொள்ளிடம் பாலம். கடந்த 1928ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம், மிகவும் குறுகலாக இருந்தது. இதனால் இந்தப் பாலத்துக்கு அருகில் புதிய பாலம் ஒன்று கட்டப் பட்டது. சென்னையில் உள்ள நேப்பியர் பாலத்தின் வடிவில் கட்டப் பட்ட இந்தப் பாலமே தற்போது போக்குவரத்துக்கு பயன்பட்டு வரும் நிலையில், பழைய பாலம் கவனிப்பார் அற்று வெறும் காட்சிப் பொருளாகத்தான் இருந்தது.

இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றில் வந்த வெள்ளத்தின் வேகத்தால்  பழைய இரும்புப் பாலத்தின் ஒரு தூண் வலுவிழந்து பாலம் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை இன்று பார்வையிட்டார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தப் பாலம் தற்போது காட்சிப் பொருளாக இருக்கிறது. நீர்வரத்து குறைந்தவுடன் பழைய பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

Related articles

Recent articles

spot_img