ஆவுடையார்கோயிலில் திமுக சார்பில் ஒன்றிணைவோம்வா திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த மாதம் மார்ச்.24ந்தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கிராமங்களில் தினசரி வேலைக்கு செல்வோர் வாழ்வாதரமின்றி சிரமப்பட்ட நிலையில் திமுக சார்பில் அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்ட சீர்திருத்தக்குழு உறுப்பினர் வக்கீல்ராமநாதன் தலைமை வகித்தார்.கவுன்சிலர் செந்தில்குமரன்,சுந்தரபாண்டியன் இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் வக்கீல் ராமநாதன்,ஆவுடையார்கோயில் ஒன்றிய சேர்மன் உமாதேவி ஆகியோர் கலந்து கொண்டு ஊரடங்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி சிப்பங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாரதிராஜா , மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கலைச்செல்வன் கா.உமாதேவி ஒன்றிய துணை செயலாளர் மாணிக்கம் சிருமருதூர் ஊராட்சி மண்ற தலைவர் கல்யாண சுந்தரம் , மனோகரன் ,சிருமருதூர் ஒன்றியகுழு உறுப்பினர் செல்வி முருகானந்தம் சாத்தையா , உட்பட பலர் கலந்து கொண்டனர்




