சென்னை: தமிழகத்தில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென் மேற்குப் பருவ மழை தற்போது நகர்ந்து வட மாநிலங்கள் பக்கம் சென்றுள்ளது. இதனால் தென் மாநிலங்களில் மழை பெருமளவு குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான வெயில் நிலவுகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் இரு நாட்களுக்கு பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு விடிய விடிய மழை கொட்டியது. தி.நகர், நந்தனம், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட நகரின் உள் பகுதிகளிலும், பம்மல், அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் நள்ளிரவு நல்ல மழை பெய்தது.