October 21, 2021, 12:51 pm
More

  ARTICLE - SECTIONS

  உண்மையை சொல்வது, சொல்லாதிருப்பது, மௌனம்: எதனை எங்கு கடைப்பிடிக்க வேண்டும்? ஆச்சார்யாள் அறிவுரை!

  abinav vidhya theerthar

  ஒருவன் சில பொருட்களை திருடியதால் அவன் போலீசில் பிடிபட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டான். விசாரணைக்கு முன் தான் பேசுவதெல்லாம் உண்மையே என்று கூறி அவனுக்கு சத்தியபிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

  அப்பொழுது அவன் உயிர் உள்ள வரையில் நான் உண்மையை பேசுவேன் என்று கூறினான். குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான் பிறகு தான் திருடவில்லை என்று அப்பட்டமாக மறுத்தான். அவனுடய வார்த்தையில் நம்பிக்கை வைத்து அவன் விடுவிக்கப்பட்டான்.

  அவனது நண்பன் பிரமாணத்தை எடுத்துக் கொண்ட பிறகும் வெட்கமில்லாமல் ஏன் பொய் சொன்னாய் என்று கேட்டான் அதற்கு சர்வசாதாரணமாக அவன் சொன்ன பதில் நான் பொய் சொல்லவில்லை நான் சொன்னதெல்லாம் உண்மையே உயிருள்ள வரையில் நான் உண்மையை கூறுவேன் என்று ஒப்புக் கொண்டேன் என் கையில் பூச்சி வைத்துக் கொண்டிருந்தேன் பதில் சொல்வதற்கு முன்பு அதனை அழுத்தி கொன்றுவிட்டேன். உயிருள்ள வரையில் நான் உண்மையை கூறுவேன் என்று நான் சொன்னது பொருந்தும் அல்லவா என்று கேட்டான்.

  உண்மையை போல் தோற்றமளிக்கும் பொய்க்கு இது ஓர் உதாரணம்

  மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியே இரு பொருள்பட அல்லது கேட்பவர்கள் வேறு மாதிரி புரிந்து கொள்ளுமாறு பேசுவார்கள் சிலர் உண்டு.

  அப்படி பேசுபவனும் உண்மையிலிருந்து விலகிய குற்றம் புரிந்தவனாகவே கருதப்படுவான் சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட ஒருவன் உண்மையை பேச வேண்டும் ஆனால் அவனுடைய சொற்கள் அவனது மனதில் உள்ள எண்ணங்களை ஒத்து அமைந்திருக்க வேண்டும்.

  சத்தியத்தை கடைபிடிக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒருவன் பேசுகின்ற வார்த்தைகள் இனிமையாய் இருத்தல் வேண்டும் இனிமையாக பேசவேண்டும் என்பதற்காக நடக்காதவைகளை கூறுவதும் தவறு ஒரு மனிதன் தன் நண்பன் ஒருவனை முட்டாளாக்க நினைத்தான். அவன் தன் நண்பனை நாடி சென்று உனக்கு தெரியாதா நீ லாட்டரியில் 10 லட்சம் வென்றிருக்கிறாய் இந்த வேளையில் எப்படி உன்னால் அமைதியாக இருக்க முடிகிறது என்று கேட்டான்.

  நண்பன் மகிழ்ச்சியில் வாய் அடைத்து நின்றான் அந்த அதிர்ச்சி குறைந்ததும் பத்து லட்சத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று மனக்கோட்டை கட்ட ஆரம்பித்தான் சற்று நேரத்தில் அந்தக் குறும்புக்கார நண்பன் இவனை விட்டு சென்று விட்டான். கடைசியில் தன்னுடைய ஜாக்பாட் அடித்த லாட்ட்ரியை எடுத்துக் கொண்டு அந்த எண்ணை செய்தித்தாளில் பார்த்து சந்தோஷப்பட நினைத்து செய்தித் தாளை வாங்கிப் பார்த்தான்.

  abinav vidhya theerthar

  அதில் அவனுடைய எண் இல்லை அதனால் அவன் சோகக் கடலில் மூழ்கினான் இனிமையான பொய் பேசுதலுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

  ஒருவருக்கு தீங்கு விளைவிக்கும் உண்மையையும் ஒருவன் சொல்லக்கூடாது ஒரு கடுமையான மாரடைப்பால் தாக்கப்பட்ட பிறகு மருத்துவமனையில் தங்கி ஓய்வு பெற்று வந்தார். அவருடைய மகன் சாலை விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். விபத்தை நேரில் பார்த்த ஒருவன் மருத்துவமனைக்கு சென்று இருதய நோயாளியை கண்டு உங்கள் மகனுக்கு என்ன நடந்தது என்று தெரியுமா அவன் சாலை விபத்தில் இறந்துவிட்டான் என்று படபடப்போடு கூடினான் மகனிடம் அளவு கடந்த பாசம் வைத்திருந்த இருதய நோயாளிக்கு இந்த அதிர்ச்சியான செய்தியை தாங்கி கொள்ள முடியவில்லை.

  abinav vidhya theerthar

  அவருடைய ஏற்கனவே பலவீனமாக இருந்த இதயத்தில் சிறிது நேரத்தில் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துவிட்டார் இத்தகைய இறுக்கமான செய்தியை சற்றும் யோசிக்காமல் தெரியப்படுத்தி அம்மனிதன் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஒருவன் உண்மை பேச வேண்டும் பேசும் வார்த்தைகளும் இனிமையாக இருக்க வேண்டும் கேட்பவர்களுக்கு அவை நன்மை தரக்கூடியதாக இருக்க வேண்டும் மன வருத்தம் தரும் உண்மைகள் சொல்லக்கூடாது மற்றவர்களை கெடுக்கும் தவறாக புரிந்து கொள்ளுமாறு செய்யும் சொற்களையும் பயன்படுத்தக் கூடாது.

  மூன்று பேரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வதற்காக தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வந்தது அவர்கள் மூன்று பேரும் சென்று கொண்டிருந்த போது தவளையை விழுங்கிக் கொண்டிருக்கும் பாம்பு ஒன்றை பார்த்தார்கள்.

  அந்தப் பாம்பிடம் உனக்கு கருணை இல்லையா என்ன செய்து கொண்டிருக்கிறாய் ஒரு உயிரைப் பறிக்கிறாயே என்று ஒருவ்ர் சொன்னார் அந்த பாம்பு என்னுடைய உணவை உண்ண தடுப்பதற்கு உனக்கு என்ன தைரியம் நீ நரகத்திற்குப் போவாயாக என்று சபித்தது அவன் நரகத்திற்கு கொண்டு செல்லப்பட்டான்

  நடந்ததைப் பார்த்து பயந்துபோன இரண்டாவது மனிதன் பாம்பிற்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்தான் அவன் இது உனக்கு இயற்கை உணவுதான் ஆகையால் நீ அதை நிச்சயமாக சாப்பிடலாம் என்றான் இப்பொழுது தவளையானது என்ன தைரியத்தில் நீ என்னை சாப்பிடுமாறு பாம்பிற்கு சொல்லிக் கொடுத்தாய் அதனால் நீ நரகத்திற்கு சென்று துன்பங்களை அனுபவிப்பாய் என்று சபித்தது

  அவன் விமானத்திலிருந்து கீழே விழுந்தான் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்த மனிதன் மூன்றாவது மனிதன் சொர்க்கத்திற்கு சென்றான் சில சமயம் உண்மைகளை கூறுவதை காட்டிலும் மௌனமாக இருப்பதே சாலச் சிறந்தது என்பதை இது நமக்கு அறிவுறுத்துகிறது. என ஆச்சார்யாள் இக்கதைகளின் வாயிலாக வாய்மையை கடைப்பிடிக்க வேண்டியதையும் வாய்மையின் திரிந்த நிலையையும் இன்று நமக்கு அறிவுறுத்தி கூறுகிறார்கள்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,573FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-