
தமிழ் ராக்கர்ஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.
தமிழ் சினிமாவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வரும் இணையதளம் தமிழ் ராக்கர்ஸ் புத்தம் புதிய படங்கள் மறுநாளே இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிடுகிறது.
இதை லட்சக்கணக்கான மக்கள் அதனை பதிவிறக்கம் செய்து அந்த புதிய திரைப்படங்களை பார்க்கிறார்கள். இதனால் 40 சதவீத வருமானத்தை சினிமா இழந்து வருகிறது.
இந்நிலையில் பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனமாக வார்னர் பிரதர்ஸ் டில்லி உயர்நீதி மன்றத்தில் தமிழ் ராக்கர்ஸிற்கு எதிராக வழக்கு ஒன்றை தொடா்ந்தனா்.
தங்களின் படங்களை அனுமதி இல்லாமல் தமிழ் ராக்கர்ஸ் வெளியிடுவதால் மிகப்பெரிய இழப்பை தாங்கள் சந்தித்து வருவதாகவும், தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சட்டவிரோத இணையதளங்கள் அனைத்தையும் நீக்க வேண்டும
என்று அந்த நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணையை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சட்டவிரோத இணைய தளங்களை நீக்க உத்தரவிட்டதுடன்
காப்புரிமையை மீறுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைக்கு உத்தரவிட்டது.



