சென்னை : ‘கிருஷ்ண ஜெயந்தி, தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஊழியர்கள் விடுப்பு போராட்டம் இவை காரணமாக, அடுத்த வாரம் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று வாட்ஸ் ஆப் வாயிலாக சுற்றிக் கொண்டிருக்கும் தகவல் உண்மையில்லை என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை; 3ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி; 4, 5ம் தேதிகளில் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் போராட்டம் என தொடர்ந்து ஐந்து நாள்கள் வங்கிகள் செயல்படாது என ‘வாட்ஸ்ஆப்’பில் தகவல்கள் உலா வருகின்றன.
இது போன்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டும். இவை உண்மைக்கு புறம்பானவை. வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




