திருக்குவளையில் ஸ்டாலினுக்கு வீணை செங்கோல் வழங்கி உற்சாக வரவேற்பு!

dmk stalin thirukuvalai - 2026

திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு திருக்குவளையில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. திமுக தொண்டர்கள் ஸ்டாலினுக்கு வீணை செங்கோல் வழங்கி கௌரவித்தனர்.

திமுக தலைவராக பொறுப்பேற்ற மு க ஸ்டாலின் முதன்முறையாக இன்று நாகை மாவட்டம் திருக்குவளைக்கு வந்திருந்தார். திருக்குவளை வந்த மு க ஸ்டாலினுக்கு மாவட்ட திமுக  சார்பிலும், திருக்குவளை கிராம மக்கள் சார்பிலும் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கருணாநிதியின் இல்லத்திற்கு சென்ற மு க ஸ்டாலின் அங்கே அஞ்சுகம் அம்மையார், முத்துவேலர், முரசொலி மாறன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்குள்ள வருகை பதிவேட்டில், ‘’தலைவர் அவர்கள் பிறந்த ஊர் திருக்குவளைக்கு பலமுறை வந்துள்ளேன். தலைவருடனும் வந்திருக்கிறேன் தனியாகவும் வந்திருக்கிறேன்! இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக வந்துள்ளேன். கழகத் தலைவராக வந்திருந்தாலும் தலைவர் கலைஞர் அவர்களின் தொண்டனாக அவர் காட்டிய வழியில் எனது பயணம் தொடர்ந்து தொடரும் வாழ்க கலைஞர்’’ என கலைஞர் இல்ல வருகை பதிவேட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் கையொப்பமிட்டார்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

பின்னர் திருக்குவளை கிராமத்தைச் சேர்ந்த பாரதி-சூர்யா தம்பதியினரின் ஆண் குழந்தைக்கு கருணாநிதி என்று பெயர் சூட்டினார். அதனைத் தொடர்ந்து திமுக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலினுக்கு திமுகவினரும் திருக்குவளை கிராம மக்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது மேடையில் ஸ்டாலினுக்கு வீணை, செங்கோல் மற்றும் புத்தகங்களை பொதுமக்கள் பரிசாக வழங்கினர்.

பின்னர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் திருவாரூருக்கு புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories