கோவில்பட்டி அருகே பலத்த காற்று! மின்வயர் அறுந்து விழுந்ததால் ரயில்கள் நிறுத்தம்: பயணிகள் பாதிப்பு

Published:

IMG 20180910 220126 - 2026கோவில்பட்டி அருகே பலத்த காற்று காரணமாக ரயில்கள் இயக்கப்படும் மின்சார வயர் அறுந்து விழுந்ததால், ரயில் ஆங்காங்க நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

IMG 20180910 220047 - 2026கோவில்பட்டி பகுதியில் இன்று மாலை 3 மணிக்கு மேல் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து சாத்தூர் செல்லும் வழியில் நள்ளி ரயில் நிலையத்துக்கு இடையே உயர் அழுத்த மின்சார வயர் அறுந்து விழுந்து விட்டது.

IMG 20180910 220148 - 2026இதனால் கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு 3 மணிக்கு வந்த திருநெல்வேலி – மும்பை தாதர் விரைவு ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து 5 மணிக்கு வந்த திருநெல்வேலி – ஜமுதாவி விரைவு ரயிலும் கோவில்பட்டியிலேயே நிறுத்தப்பட்டது.

இதே போல், கோயம்புத்தூர்- நாகர்கோவில் பயணிகள் ரயில் சாத்தூர் ரயில் நிலையத்திலும், தூத்துக்குடி – மைசூர் விரைவு ரயில் குமாரபுரம் ரயில் நிலையத்திலும், சென்னை-குருவாயூர் விரைவு ரயில் துலுக்கர்பட்டியிலும் நிறுத்தி வைக்கப்பட்டன.

IMG 20180910 220159 - 2026திருநெல்வேலியில் இருந்து ரயில்வே மின் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து மின் வயரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடுமை அவதிக்குள்ளாகினர்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

Related articles

Recent articles

spot_img