திருவொற்றியூர் பகுதி கண்டெய்னர் கனரக வாகன ஓட்டிகளில் தொடரும் வழிப்பறி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

mathan1 horz - 2026

சென்னை: சென்னை திருவொற்றியூர் பகுதியில் (கண்டெய்னர்) கன ரக வாகன ஓட்டிகளிடம் தொடர்ந்து நடைபெறும் வழிப்பறிச் சம்பவங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

சென்னை திருவொற்றியூர் அருகே கண்டெய்னர் லாரியோடு காத்திருந்த பரணி டிரான்ஸ்போர்டு  ஓட்டுனர் தினேஷ் மற்றும் முருகேசன் ஆகியோரிடம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கோண்டு கை மற்றும் கால் பகுதியில் வெட்டி விட்டு ஓடியுள்ளார்கள்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரும் போக்குவரத்து காவலர் குமாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.  குமார் துரத்திச் சென்றதில், வெட்டிவிட்டு ஓடிய ராம்குமார் (வயது 22) என்பவரை பிடிபட்டுள்ளார். பிடிபட்டவனை விசாரித்ததில், அவன் பெயர் மதன் (வயது 32) என்பது தெரியவந்தது. பின்னர், வெட்டுக் காயமடைந்த இருவரையும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இதுகுறித்து அங்கிருந்த லாரி டிரைவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் கண்டெய்னர் லாரி ஓட்டி வருகையில் பல இடங்களில் இருள் சூழ்ந்து காணப்படும். அந்த இடங்களில் மர்ம நபர்கள் சிலர் ஒளிந்திருந்து கஞ்சா உட்கொண்ட நிலையில் போதையோடு திடீரென முன்னால் நின்று கண்டு கத்தி. உருட்டு கட்டை போன்றவற்றால். தாக்கிவிட்டு பணம் செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்து ஓடி விடுவதாக சுட்டிக் காட்டினார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே போல வழிப்பறிக் கொள்ளையர்கள் ஏழுமலை என்ற காவலரை வெட்டிவிட்டு ஓடியதும் குறிப்பிடத்தக்கது. சட்டம் ஒழுங்கு காவலர்கள் இரவு நேர ரோந்து பணிகளை மேற்கொண்டால் மட்டுமே இதுபோன்ற வழிப்பறிக் கொள்ளையிலிருந்து தப்பிக்க முடியும் என டிரைவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து இணை ஆணையர் பகலவன் மற்றும் துணை ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் கோரிக்கை வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.