செங்கோட்டையில் அமைதி திரும்ப பாடுபட்ட அதிகாரிகளைப் பாராட்டி போஸ்டர்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்

senkottai poster - 2026

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, இஸ்லாமியர்கள் கல்லெறிந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இதைத் தொடர்ந்து இரு தரப்பும் பதிலுக்கு பதில் தாக்கிக் கொண்டு கலவரக் காடாக்கினர்.

தொடர்ந்து சட்டம் ஒழுங்கைப் பாதுகாக காவல் துறையினர் 144 தடை உத்தரவு போட்டு, கண்காணித்தனர். மேலும், மாவட்ட ஆட்சியர், ஐஜி என அனைவரும் செங்கோட்டையில் முகாமிட்டு, மக்களை அமைதிப் படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினர்.

இந்நிலையில், இஸ்லாமியர்களுடன் எந்த வர்த்தக உறவும் வைத்துக் கொள்ள மாட்டோம் என்றும், இஸ்லாமியர்களின் கடைகளில் பொருள்களை வாங்க மாட்டோம் என்றும் ஊர் மக்கள் கூடி தீர்மானம் போட்டனர். இதை தொடர்ந்து கடைப்பிடித்தும் வருகின்றனர். அதைத் தவிர, வேறு எந்த விதமான பதட்டமும் ஏற்பட்டு விடாமல், இரு தரப்பும் அனுசரித்து அமைதியாக வழக்கம் போல் ஊருக்குள் உலவிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று இரு முறை அமைதிக் கூட்டத்தைக் கூட்டி, சமாதானப் போகும் படி அதிகாரிகள் வற்புறுத்தினர். இதை அடுத்து, செங்கோட்டையில் அமைதி திரும்பிட பாடுபட்ட அதிகாரிகள் அனைவரையும் பாராட்டி போஸ்டர் ஒட்டி, அதிகாரிகளுக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

1 thought on “செங்கோட்டையில் அமைதி திரும்ப பாடுபட்ட அதிகாரிகளைப் பாராட்டி போஸ்டர்!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.