பொங்கல் நாளில் சோகம்! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை மூடப்பட்டதால் பக்தர்கள் காத்திருப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
meenakshi amman temple madurai - 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று காலை நடை திறக்காததால், ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு உள்ளே செல்ல முடியாமல் காத்திருந்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மணலூரைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (57) என்பவர், கோயிலில் இரவு நேரக் காவலராக பணியில் இருந்தார். நேற்று இரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, அவரது உயிர் பிரிந்தது.

இதை அடுத்து, கோயிலில் பரிகார பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், இன்று காலை வழக்கம் போல் 5.30 க்கு திறக்கப்பட வேண்டிய கோயில் நடை திறக்கவில்லை.

கோயிலில் தூய்மைப் படுத்தும் பணிகள், சுத்தி செய்யும் சடங்குகள் நடைபெற்று வருகின்றன. பரிகார பூஜைகள் முடிந்த பின்னர் கோயில் நடை திறக்கப்படும் என நிர்வாகம் கூறியுள்ளது.

இன்று பொங்கல் திருநால் என்பதாலும் ஐயப்ப சீசன் காலம் என்பதாலும் அன்பர்களும், ஐயப்ப பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.