நேற்று அடித்துக் கொண்டார்கள்.. இன்று ஒன்றாக ஒரே மேடையில் ஆசி வழங்கினார்கள்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
kamal stalin2 - 2026

சென்னை: சென்னை திருவான்மியூரில் திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் இல்லத் திருமண விழாவில் நடிகரும் ம.நீ.ம., தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்றார். திமுக., எம்.எல்.ஏ., இல்லத் திருமணத்தை மு.க.ஸ்டாலின் முன்னின்று நடத்தி வைத்தார்.

இந்தத் திருமண விழாவில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் பங்கேற்றார்.

kamal stalin - 2026

அரசியல் களத்தில் ஸ்டாலினும், கமலும் அண்மையில் பரஸ்பரம் விமர்சனம் செய்துகொண்டனர். கமல்ஹாசன் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, திமுக.,வின் அதிகார பூர்வ ஏடான முரசொலியில் கட்டுரை வந்தது. இந்த நிலையில் இருவரும் இன்று திருமண விழாவில் பங்கு கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.