கிழிஞ்ச சட்டையுடன் வெளியில் வரமாட்டேன்; ஸ்டாலினை கலாய்த்த கமல்!

Published:

10 June24 Makkal kamal - 2026

சென்னை: கிழிந்த சட்டையுடன் நான் வெளியில் வரமாட்டேன்; நல்ல சட்டை போட்டுக்கொண்டு வெளியில் வருவேன் என்று பேசினார் நடிகர் கமல்ஹாசன்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் பேசிபோது…

கிராம சபை எனும் அமைப்பு 25 வருடங்களாக இருக்கிறது. இதுவரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

இப்போது கிராம சபைக் கூட்டத்தில் நான் பங்கேற்பதை பார்த்து காப்பி அடிக்கிறீர்களே, வெட்கமாக இல்லை. நான் தாமதமாக அரசியலுக்கு வந்தது நினைத்து வருந்துகிறேன்.

நான் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் போன்றது. யார் வேண்டுமானாலும் அதை படிக்கலாம்.

நான் சட்டசபைக்கு வந்தால், சட்டையை கிழித்து கொண்டெல்லாம் வெளியே வர மாட்டேன். அப்படியே வந்தாலும் வேறு சட்டையை மாற்றிக் கொண்டு தான் வருவேன். இவ்வாறு அவர் பேசினார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img