நடிகை வடிவுக்கரசியின் வீட்டில்… பூட்டை உடைத்து நகைத் திருட்டு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினி நியூஸ் சினிமா சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

vadivukkarasi - 2026

நடிகை வடிவுக்கரசியின் வீட்டில், பூட்டை உடைத்து 8 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தி. நகரில் வசிக்கும் நடிகை வடிவுக்கரசி கடந்த 10-ஆம் தேதி வீட்டைப் பூட்டிக் கொண்டு மகள் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென 19-ஆம் தேதி இரவு வீடு திறந்து கிடப்பதாகவும் விளக்குகள் எரிவதாகவும் காவலாளி போன் செய்துள்ளார்.

இதனால் தனது வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்த வடிவுக்கரசி பின்னர் வீட்டைப் பூட்டிக் கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த 8 சவரன் நகைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது.

இது குறித்து அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.