தூத்துக்குடி மக்கள் புல்லட் ரயிலில் சென்றுவிடக் கூடாது என்ற வக்கிர புத்தி… கனிமொழிக்கு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்

tamilisai soundarrajan 1 - 2026

தூத்துக்குடி மக்கள் புல்லட் ரயிலில் சென்றுவிடக் கூடாது என்ற வக்கிர புத்தி கனிமொழிக்கு இருக்கிறது என்று சாடியுள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிகள் வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பிரசாரம் மேற்கொண்டார்! அப்போது அவர் கனிமொழி கிண்டல் செய்து பேசி இருப்பது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தினார்

செய்தியாளர்களிடம் அப்போது பேசிய தமிழிசை ஜப்பானில் இருந்து தூத்துக்குடி இன்றுதான் இறக்குமதி ஆனதா என்றும், திமுக ஆட்சியில் இருந்தபோதும் தூத்துக்குடிக்கு என்ன செய்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார் .

கனிமொழி சொல்லியிருக்கிறார்… நான் ஏதோ தோல்வி பயத்தில் புல்லட் ரயில் விடுவேன் என்று சொன்னேனாம்! இது என்ன பேச்சு?! ஜெயித்தால் அதன் பிறகு நல்ல பதவிக்கு வந்தால், அதன் மூலம் மக்களுக்கு நல்லது செய்யலாம் என்றால்தான் இப்படி சொல்ல முடியும்! யாராவது தோல்வி பயத்தில் புல்லட் ரயில் விடுவேன் என்று சொல்வார்களா?

இவரது அண்ணன் ஸ்டாலின் சிறப்பு விமானத்தில் உதவியாளர் திருமணத்திற்கு செல்ல வேண்டும்! மம்தா பானர்ஜி கூட்டத்திற்கு மேற்கு வங்கத்திற்கு தனி விமானத்தில் செல்ல வேண்டும்! ஆனால் தூத்துக்குடி மக்கள் புல்லட் ரயிலில் செல்ல கூடாது என்கின்ற வக்கிரபுத்தி இவர்களுக்கு!

ஆக இந்த மக்களுக்கு நல்ல வசதி செய்து கொடுக்க கூடாது என்ற வக்கிரபுத்தியில் தான் இவர் இருக்கிறார்! தூத்துக்குடி மக்கள் புல்லட் ரயிலில் செல்லக் கூடாது என்கின்ற வக்கிரபுத்தி இவர்களுக்கு!

இந்தத் தோல்வி பயம் எனக்கு இல்லை! என்னைக் கேட்டால் அரசியலில் எனக்கு பயமே இல்லை! பிறகு என்ன தோல்வி பயம்?! நீங்கள் ஆட்சியில் இருந்தீர்களே இல்லையா அப்போதும் தூத்துக்குடி இருந்தது இல்லையா?! இப்போது என்ன தூத்துக்குடி புதுசாவா வந்திருக்கிறது?! ஜப்பானில் இருந்து இறக்குமதி ஆகி இருக்கிறதா?! என்ற கேள்வியை தமிழிசை எழுப்பினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.