அதிர வைக்கும் தூத்துக்குடி அரசியல் விவகாரங்கள்!

Published:

sterlite tuticorin - 2026

கனிமொழி தூத்துக்குடியில் போட்டி, எப்போ முடிவு எடுத்தாங்க? திஹார் ஜெயில்ல இருக்கும்போதே!

இதுவரை தூத்துக்குடியை விட நச்சுக் கலந்த காற்றை சுவாசிக்கும் பல ஊர் பெயர்கள் வந்துவிட்டன மேலும் ஸ்டெர்லைட் மூடியதால் காற்றின் தரம் உயர்ந்ததாக எதாவது ஆய்வு முடிவு வந்து இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை!

ஆலையை மூடியதால் பல ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் போனதுதான் மிச்சம்,காப்பர் விலையும் மற்ற உப பொருட்களின் விலையும் எறியதுதான் மிச்சம்!

ஸ்டெர்லைட் பிரச்னை எப்போ வந்தது? 2018 மே,!

பல நாள் திட்டமிட்டு அன்றைக்கு கூடி இருந்த கூட்டம் ஆலைக் குடியிருப்பில் புகுந்து தீ வைத்த காணொளி பார்த்தோம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டதை அறிவோம்!

thuthukkudi vehicles - 2026

ஒரு வேளை போலீஸ் இந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்தாமல் இருந்து இருந்தால் இவர்களால் இன்னும் உயிர்ச் சேதம் பலமாக இருந்து இருந்திருக்கும், அப்போ சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ஆட்சியை கலைக்க சொல்லலாம். துப்பாக்கி சூடு நடத்தியதால் 13 உயிரோடு இது நின்றது!

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

எப்படிப் போனாலும் நமக்கு வேண்டியது இருக்கும் அரசின் பெயரைக் கெடுக்க வேண்டும். ,தொகுதியில் ஜெயிக்க வேண்டும்!

இதுதானே திராவிடம்?! எத்தனை பேர் தீக்குளித்து இருப்பான்… இந்த திராவிட கட்சிகளுக்காக! இவர்களை இன்னும் ஞாபகம் வைத்து இருக்கிறதா இந்த திராவிடம்?!

வைகோ அவர்களுக்காக திமுகவில் இருந்து பிரிந்த போது, எத்தனை பேர் தீக்குளித்தார்கள்?! இவர்களின் தியாகத்துக்கான மரியாதைதான் இன்று மு.க.ஸ்டாலினை முதல்வர் ஆக்கியே தீருவேன் என்று வைகோ சொல்லிக் கொண்டிருப்பது!

tutukudi collectorate - 2026

ஏன் மக்கள் இதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? இன்னும் இவர்கள் வந்து நல்லது செய்வார்கள் என்று நம்புகிறார்கள்! ஒரு தொகுதி ஜெயிக்க 13 உயிர்ப் பலி, மத்தியில் அமைச்சர்களை காப்பாற்றிக் கொள்ள மொத்த இலங்கைத் தமிழரும் பலி, இதுதான் இவர்கள் சரித்திரம்!

இவர்கள் ஜெயிக்க எத்தனை உயிர்ப்பலி வேண்டுமானாலும் கொடுப்பார்கள்! தூத்துக்குடியில் நடந்தது திட்டமிட்ட நாடகம்!

அவர்கள் இதை விட அதிக உயிர்ப்பலி வாங்கியிருப்பார்கள். ஆனால் அரசாங்கம் அதை தடுத்துவிட்டது. இன்னும் இவர்களை  நம்பி ஓட்டுப் போட்டால் தமிழ்நாட்டையும் இந்தியவையும் கூறு போட்டு விற்று விடுவார்கள்!

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Related articles

Recent articles

spot_img