கல்லெறி கலாசாரம், பாட்டில் எறி பண்பாடு… பெரியபட்டினத்தில் விஷமியால் மண்டை உடைந்த உதயதேவர்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்

periyapattinam1 - 2026ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பிரசாரம் மேற்கொண்ட போது, திடீரென பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தி ஒருவரின் மண்டையை உடைத்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் பெரியபட்டினம் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பாஜக., வேட்பாளர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, சோடா பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் தமிழக அமைச்சர் மணிகண்டன், அன்வர்ராஜா எம்.பி., மற்றும் பலர் சென்றனர்.

இவர்கள் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பெரியபட்டினம் பகுதியில் வாக்கு சேகரித்துச் சென்ற போது, அதப் பகுதியில் உள்ள வீட்டின் மாடியில் இருந்து மர்ம நபர்கள் சிலர் சோடா பாட்டில்களை வேட்பாளர் நயினார் நாகேந்திரனைக் குறிபார்த்து வீசியுள்ளனர். ஆனால், இந்தத் தாகுதலில் திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் உடையப்பன் என்ற உதயதேவர் தலையில் காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

periyapattinam2 - 2026

வீட்டின் மாடியில் இருந்து கல்லெறிவது, சோடா பாட்டில்கள் எறிவது ஆகியவை ஒரு சிலருக்கு பண்பாட்டு கலாசாரா ரீதியாக கற்றுக் கொடுக்கப் பட்டு வந்திருப்பதாக உடன் சென்ற பாஜக.,வினர் வருத்தத்துடன் கூறினர்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும், பிஜேபி வேட்பாளர் துரைகண்ணன் சென்ற போது, அவர் மீதும் இதே போன்று பெரியபட்டினத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு இடமாகியுள்ள ராமநாதபுரத்தை சரி செய்ய வேண்டியது அவசியம் என்றும் கூறுகின்றனர் பாஜக.,வினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.