மதுரை ஆதின மடத்தின் பெயரைக் காக்க… அருணகிரி ஆதினம் மீது வழக்கு தொடருவேன்!: டிடிவி தினகரன்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

ttv dinakaran - 2026

தொடர்ந்து பொய் தகவல்களை பரப்பினால் மதுரை ஆதீனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.! யாருக்கோ உதவுவதற்காக இப்படி பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பினால், மதுரை ஆதீன மடத்தின் பெயரைக் காக்கவாவது, அருணகிரி ஆதீனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்க விரும்புகிறேன் என்று டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.

தேர்தலுக்குப் பின்னர், அதிமுகவுடன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணையப் போகிறது என்று மதுரை ஆதீனம் அண்மைய்ல் கூறியிருந்தார். இதை உடனடியாக டிடிவி தினகரன் மறுத்து ட்விட்டரில் தகவல் வெளியிட்டிருந்தார்.

ஆனால், இன்று மீண்டும் மதுரை ஆதீனம் அளித்த பேட்டியில், தினகரன் மறுத்தாலும், இணைப்பு நடக்கப்போவது உண்மைதான் என்று கூறியிருந்தார்.

madurai aadheenam press meet stills 12 - 2026

இதனால் கோபமடைந்துள்ள டிடிவி தினகரன் கூறுகையில், அதிமுகவுடன் அமமுகவை இணைக்க எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. தொடர்ந்து பொய்த் தகவலை பரப்பினால் மதுரை ஆதீனம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ச்சியாக, அதிமுக-அமமுக கட்சிகள் இணைப்பு பற்றி பொய்த் தகவலை மதுரை ஆதீனம் பரப்பி வருவதை பார்த்தால், அவர் யாருக்கோ ஏஜெண்ட்டாக இருக்கிறார் என்பது தெரிகிறது.

இணைப்பு பேச்சுவார்த்தை உண்மை என்றால் அதை செய்வது யார் என்பதை வெளிப்படையாக சொல்லலாமே.. யாருக்கோ உதவுவதற்காக பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்… என்று காட்டமாகக் கூறியிருக்கிறார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.