பாவூர்சத்திரத்தில் மனவளக்கலை யோகா பயற்சி

உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரம் காமராஜ் நகர், வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் உள்ள சி.டி.எஸ் திருமணமண்டபத்தில் , குற்றாலம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மனவளக்கலை யோகா பயற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு அறக்கட்டளை தலைவர் அண்ணாமலையார் தலைமை வகித்தார். மனவளக்கலை முதுநிலைப்பேராசிரியர் எம்.எ.வேதசுப்பையா கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். முகாமில் கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் ராமசாமி, அறக்கட்டளை செயலாளர் ஆவுடையப்பன், பொருளாளர் சக்திவேல், அறங்காவலர்கள் தங்கத்துரைபாண்டியன், அன்பரசன், முருகன், சிவன்பாண்டியன், பரமசிவம், பால்வண்ணன், மற்றும் பாவூர்சத்திரம், ஆலங்குளம், சுரண்டை சுற்றுப்பகுதிகளில் உள்ள தவமையங்களில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர். செய்தி ;செ .பிரமநாயகம் தென்காசி 2e9a4e5a9355312769915bb2c475a5a5 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.