பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

உள்ளூர் செய்திகள் கல்வி சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

9888Students exam results 008 - 2026

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. பனிரெண்டாம் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குறுந்தகவல்கள் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட உள்ளன.

இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8,87,992 மாணவ, மாணவியர்கள் எழுதினர். பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதியுடன் முடிவடைந்தன.

இந்த வருடம் விரைவிலேயே விடைத்தாள் திருத்தி, முடிவு அறிவிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 29 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில் இன்று காலை 9.30க்கு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in இணையதங்கள் மற்றும் மின்னஞ்சல் மூலம் தேர்வு முடிவை அறியலாம்.

பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கு குறுந்தகவல் மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

நாளை முதல் 26ஆம் தேதி வரை தாங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 24-ம் தேதி முதல் www.dge.tn.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற மாணவர்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் மூலமும் ஏப்ரல் 22 முதல் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.