சென்னையில் தொடங்கியது தண்ணீர் பஞ்சம்… கூடவே லாரியால் ஏற்படும் விபத்தும்..!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

chennai water lorry - 2026

சென்னை   வானகரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் ஓடிய தண்ணீா் லாாியால்  நிகழ்ந்த விபத்தில் தாயின் கண்முன்னே 6 வயது சிறுவன் மீது மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருவேற்காட்டைச் சேர்ந்தவர் கீதா. இவர் தனது 6 வயது மகன் தர்ஷன் மகள் தியாவையும் டூ வீலரில் அழைத்துக்கொண்டு நெற்குன்றத்தில் உள்ள தமது  உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது  வானகரம் அருகே வரும்போது, சாலையோரத்தில் இருந்த மணலில் வாகனத்தின் சக்கரம் சிக்கி, நிலைதடுமாறியதை  அடுத்து

பின்னால் அமர்ந்திருந்த சிறுவன் தர்ஷன் கீழே விழுந்துள்ளார். அப்போது அவ்வழியே அசுர வேகத்தில் வந்த தண்ணீர் லாரி  சிறுவன் தர்ஷன் மீது மோதியது  இதில்  சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க சிறுவன் தா்ஷன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட தாய் தன் கண்முன்னே மகன் லாரி மோதி  இறந்ததைப் பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.

தகவலறிந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டூ வீலரில் குழந்தைகளை அழைத்துச்செல்வோர் கூடுதல் கவனத்துடன் செல்லவேண்டும் என்று பொது மக்களுக்கு போலீசார் அறிவுரை கூறினா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.