பாரத் மாதா கீ ஜே – கோஷத்துக்கே… காரில் ஏறி சிட்டாய்ப் பறந்த கோவை சரளா!

Published:

kovai sarala - 2026

இந்து தீவிரவாதம் என்ற சர்ச்சை பேச்சு காரணமாக கடந்த 2 நாட்களாக தனது பிரசாரத்தை ரத்து செய்திருந்த கமல், இன்று மீண்டும் பிரசாரக் களத்தில் இறங்கியிருக்கிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப் பட்டுள்ளது.

மேலும் அரவக்குறிச்சியில் கமல் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. எனவே அவர் ஏந்நேரமும் கைதாகலாம் என்ற சூழல் ஏற்பட்டது. கமல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது. இத்தகைய சூழலில் கமல் இன்று மீண்டும் பிரசாரக் களத்துக்கு வருகிறார்.

இதற்கிடையே திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து மதுரை திருப்பரங்குன்றம் நிலையூர் ஹார்விபட்டி தோப்பூர் பகுதியில் காமெடி நடிகை கோவை சரளா நேற்று பிரசாரம் மேற்கொண்டார்

ஹார்விபட்டியில் கோவை சரளா பேசிக் கொண்டிருந்தபோது திருப்பரங்குன்றம் நகர பாஜக தலைவர் வேல்முருகன் தலைமையில் அங்கு வந்த பாஜக தொண்டர்கள் பாரத் மாதா கி ஜே என்று கோஷம் போட்டனர்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

இதனால் பதறிப்போன கோவை சரளா பிரசார வேனில் இருந்து இறங்கி விறுவிறுவென காரில் ஏறி அமர்ந்து கொண்டு சிட்டாய்ப் பறந்து சென்று விட்டார்!

Related articles

Recent articles

spot_img