ஒத்த, ரெட்டை மாட்டு வண்டி ரெண்டுமே சிறந்ததுதான்! : செம்மலை

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

semmalai - 2026

அதிமுக தொண்டர்கள் அனைவருக்கும் கருத்துச் சொல்ல உரிமை உள்ளது.ஒவ்வொரு தொண்டர்கள் சொல்லும் கருத்துகளை தலைமை பரிசீலித்து முடிவெடுக்கும் என்று அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை சேலத்தில் பேட்டி அளித்தார்.

ஒற்றை, இரட்டை தலைமை பற்றி கட்சியின் தலைமை பரிசீலித்து முடிவெடுக்கும் மற்றும் ஒற்றை மாட்டு வண்டி, இரட்டை மாட்டு வண்டி இரண்டுமே சிறந்தது தான் என்றும் தெரிவித்தார்..

சேலம் ஆய்வு மாளிகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அதிகாரிகளுனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு முன்பாக அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது,தமிழக முதல்வர் தமிழகத்திலுள்ள அத்தனை மாவட்டங்களிலும் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.

சேலம் மாவட்டத்தை வளர்ந்த மாவட்டமாக மாற்றி வெற்றி கண்டுள்ளார்.முதல்வரின் பணிகளை பாராட்ட மனம் இல்லாமல், வேண்டுமென்றே குறைகூறி வருகிறார்கள்.

சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் முதல்வர் மீது தவறாக குற்றம் சாட்டி வருகிறார். அரசு விழாக்கள் தன்னை அழைக்கவில்லை என்று கூறி முதல்வர் மீது அவபெயர் வர வைப்பதற்காக தவறான தகவலை பரப்பி வருகிறார்.

சேலம் ஈராடுக்கு பாலம் திறப்பு விழாவிற்கு எந்தவித அழைப்பிதழ்கள் அடிக்க வில்லை. அரசு விழாவில் கலந்து கொள்வதற்கு அங்கீகாரம் பெற்றவரா என்றால் இல்லை. எஸ்.ஆர்.பார்த்திபன் இன்னும் பதவிப் பிரமாணம் செய்யாத நிலையில் அவருக்கு மரியாதை வழங்கும் வகையில் அரசு விழாவில் இடமளிக்கப்பட்டது.

சேலத்தில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்களின் அரைகுறை வேலைகளை அதிமுக ஆட்சியில் முழுமையாக கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. முதல்வரைப் பற்றி பொய்யான பிரச்சாரம் செய்வதற்கான காரணம் திமுக கட்சியில் முக்கிய பொறுப்பு வாங்குவதற்காகவே, எஸ்.ஆர் பார்த்திபன் திட்டமிட்டு செய்கின்ற பொய் பிரச்சாரம் என்றும் கூறினார்.

சேலம் மாவட்டத்திற்கு முதல்வர் இதுவரை 2750 கோடி நிதி பெற்று வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளார் மற்றும் சேலம் சீர்மிகு நகரம் திட்டத்திற்காக 941 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

தொடர்ந்து பேசியவர்,அதிமுக பொறுத்தவரை மக்கள் இயக்கம். இதில் உள்ள தொண்டர்கள் அனைவருக்கும் கருத்துச் சொல்ல உரிமை உள்ளது.ஒவ்வொரு தொண்டர்கள் சொல்லும் கருத்துகளை தலைமை பரிசீலித்து முடிவெடுக்கும்,

தலைமை எடுக்கும் முடிவிற்கு நாங்கள் கட்டுப்படுவோம் மற்றும் ஆட்சியில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும், கட்சித் தலைமையில், பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கட்சிக்குள் எந்த கோஷ்டி பூசலும் குழப்பமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் ஒற்றை, இரட்டை தலைமை பற்றி கட்சியின் தலைமை பரிசீலித்து முடிவெடுக்கும் மற்றும் ஒற்றை மாட்டு வண்டி, இரட்டை மாட்டு வண்டி இரண்டுமே சிறந்தது என்றார் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.