தமிழிசை, மோதியை தரக்குறைவாக பேசிய ‘காமெடி’க்கு ‘ஷாக் ட்ரீட்மெண்ட்’ கொடுத்த இந்துக்கள்!

Published:

aranthangi nisha - 2026

நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இஸ்லாமிய பெண்மணி அறந்தாங்கி நிஷா, கடந்த இரண்டு நாட்களாக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். திமுக சார்பில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய அறந்தாங்கி நிஷா, அரசியல் என்ற நிலையையும் மீறி, மிகக் கடுமையாக பிரதமர் மோடியையும், பாஜக தமிழக தலைவர் தமிழிசையையும் விமர்ச்சித்து பேசினார்.

அதற்கும் ஒரு படி மேலே சென்று தமிழிசையை பரட்டை என்றும் படர்தாமரைதான் மலரும் என்றும் மிகவும் மட்ட ரகமாகவும், மலின ரசனையுடனும் அவதூறாகப் பேசினார்.

அறந்தாங்கி நிஷா என்பவர், திமுக., மேடைப் பேச்சாளர் இல்லை. சாதாரணமாக மேடைகளில் தனியார் நிகழ்ச்சிகளில் நகைச்சுவை ஜோக்ஸ் சொல்லி நடித்து வரும் பெண்மணி. வெளிநாட்டு மூலதனத்துடன் இந்திய விரோத நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ஒரு தனியார் டிவியில், காமெடி ஷோவில் பங்கு கொண்டு மக்களிடம் பிரபலமானவர். அப்படி ஒரு பெண்மணி, நாட்டின் பிரதமரையும், தமிழகத்தில் ஒரு தேசியக் கட்சியின் தலைவியாக இருக்கும் ஒரு பெண்மணியையும், பெண்ணிய ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் மட்டரகமாக விமர்சித்துப் பேசி, தனது உள்ளத்தில் எத்தனை நாட்கள் வெறுப்புடன் வாழ்ந்து வந்திருக்கிறோம் என்பதைக் காட்டியிருக்கிறார்.

சாதாரணமாக, நம் நாட்டின் பிரதமர் மோதி குறித்து, நகைச்சுவை என்ற பெயரில் டிவி., ஷோக்களில், மேடைகளில் இத்தனை நாட்களாக இவ்வளவு வன்மத்தை மனதில் வைத்துக் கொண்டு, இத்தகைய காழ்ப்புணர்வையும் வெறியையும் வைத்துக் கொண்டுதான் தனது நாடக நிகழ்ச்சிகளில் மோடியை விமர்ச்சித்து வந்தாரா என பாஜக.,வினர் கேள்வி எழுப்புகின்றனர்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் முத்துமாரியம்மன் கோவில் நிகழ்ச்சிக்கு ஆடி மாதம் அறந்தாங்கி நிஷா குழுவினர் பங்கு பெறும் காமெடி நிகழ்ச்சிக்கு ஊர் மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் நிஷா தொடர்ந்து இந்து மக்களுக்கு எதிராக பேசுவதாகவும் நாட்டின் உயரிய பொறுப்பில் இருக்கும் பிரதமரை தவறாக விமர்சனம் செய்து வந்த காரணத்தாலும், தங்கள் ஊர் கோயில் நிகழ்ச்சியில் நிஷா பங்கு பெறக் கூடாது என அந்த ஊர் இளைஞர்கள் ஊர் பஞ்சாயத்திடம்  வற்புறுத்தினர். இதை அடுத்து, அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அவர்களும் நிஷா பங்குபெறும் நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.

மேலும் நிஷா ஒரு இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி என்பதையும் கடந்து, அவரது நகைச்சுவை காமெடி நிகழ்ச்சிகளை ரசித்துப் பார்த்து வந்தோம்! ஆனால் அவரது திமுக. மேடைப் பேச்சு எங்கள் ரத்தத்தை சூடாக்கியுள்ளது. இனி எங்கள் சுற்றுவட்டார பகுதிகளில் நிஷா கலந்து கொள்ளும் எந்தக் கலை நிகழ்ச்சியும் நடைபெறாது என்றும்  ஊர்த் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

இதைத் தொடர்ந்து தனது எதிர்கால வாழ்க்கைக்கும் வருமானத்துக்கும் ஆபத்து ஏற்பாட்டிருப்பதை உணர்ந்த  நிஷா, இது குறித்து மன்னிப்பு கேட்டார். மேலும்  தனது வீடியோவை வெளியிட்ட தனியார் ஊடக நிர்வாகத்தை தொடர்புகொண்டு அந்த வீடியோவை தளத்தில் இருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்தார். தாம் தமிழிசை குறித்து தவறாகப் பேசவில்லை என்றும், தம்முடன் காமெடி செய்த ஒருவர் தான் அவ்வாறு பேசினார் என்றும் விளக்கம் அளித்தார்.

இருப்பினும், ஊர் மக்கள் பலரும் நிஷாவின் வருத்தத்தை ஏற்கவில்லை! மனதில் ஒரு கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டினை வைத்துக் கொண்டுதான் இவ்வளவு நாட்களாக தனது காமெடி நிகழ்ச்சிகளில் நிஷா மத்திய அரசையும் பிரதமரையும் விமர்ச்சித்து வந்தார் என்று தெரியவந்துள்ளது என்று கூறி, இது போன்றவர்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் தங்கள் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அறந்தாங்கி நிஷாவுடன்  ஆர்.எஸ்.எஸ்., தொண்டர் ஒருவர் பேசிய போது, இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதீர்கள்; இப்படி எல்லாம் பேசாதீர்கள் என்று அறிவுரை கூறிய உரையாடலின் ஒலிப்பதிவு… 

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

Related articles

Recent articles

spot_img