தமிழக டிஜிபி.,யாக திரிபாதி நியமனம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

jktripati - 2026 சென்னை: தமிழகத்தின் அடுத்த காவல்துறை தலைமை இயக்குனராக ஜே.கே.திரிபாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் தற்போதைய டிஜிபியாக பதவியில் இருக்கும் டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்த நிலையில், புதிய டிஜிபியை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நியமனத்திற்கு பணிமூப்பு அடிப்படையில் ஐபிஎஸ் அதிகாரிகளான ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன், ஜாபர்சேட், லட்சுமி பிரசாத், ஆசுதேவ் சுக்லா, மிதிலேஷ் குமார் ஜா, தமிழ்ச்செல்வன், ஆசீஷ் பங்க்ரா, சைலேந்திர பாபு, கரண் சின்ஹா, பிரதீப் வி.பிலிப், ரமேஷ் குடவாலா மற்றும் விஜயகுமார் என 14 பேர் அடங்கிய பட்டியலை தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே யுபிஎஸ்சிக்கு அனுப்பிவைத்திருந்தது.

tirpati tn dgp - 2026இதில் சிலர் ஆறு மாதங்களுக்குள் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் 6 மாதத்தில் ஓய்வு பெற இருப்பவருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப் படக் கூடாது என்பதால், 4 பேர் இந்த வாய்ப்பை இழந்தனர்.

மீதமுள்ள 10 பேரில், ஜே.கே.திரிபாதி மற்றும் ஜாபர் சேட் ஆகியோர் தரவரிசையில் முன்னணியில் இருந்தனர். இதன் அடிப்படையில், தமிழகத்தின் அடுத்த டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமனம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப் பட்ட நிலையில், தமிழக டிஜிபியாக திரிபாதியை நியமித்து அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரி ஜே.கே.திரிபாதி, சென்னை காவல்துறை ஆணையர், சட்ட ஒழுங்கு ஏடிஜிபி ஆகிய பதவிகளை வகித்துள்ளார்!

1 thought on “தமிழக டிஜிபி.,யாக திரிபாதி நியமனம்!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.