இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள்: வைகோ…!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

vaiko 4 - 2026

இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள் என்று, எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தபின் வைகோ பேட்டி அளித்தார்.

தனக்கு வழங்கப் பட்ட தண்டனை குறைந்த பட்ச தண்டனை என்றும், தாம் அதிக பட்ச தண்டனை கோரியதாகவும் வைகோ கூறினார்.

அவர் மேலும் செய்தியாளர்களிடம் கூறியது…

ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்திய அரசு காரணம் என நான் பேசினேன்! நான் பேசியதை அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் நேரில் சொன்னேன்!

நான் பேசியது தேச துரோகம் அல்ல! நீதிபதி வழங்கிய தீர்ப்பை வாங்கி பார்த்தோம், அதில் குறைந்தபட்ச தண்டனை கேட்டதாக இருந்தது!

எனக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது, நான் அதிகபட்ச தண்டனை தான் கேட்டேன்! ஆயுள் தண்டனை என்றால் கூட மகிழ்ச்சியோடு ஏற்பேன்!

விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதற்காக 19 மாதம் சிறையில் இருந்தேன்! நான் என் கருத்தை தொடர்ந்து விதைப்பேன், தொடர்ந்து விடுதலை புலிகளை ஆதரித்து பேசுவேன் என்றார் வைகோ!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.