திமுக., ஆட்சியில் ‘தூக்கி’ கொடுக்கப்பட்ட நிலத்தை ஒப்படைக்க காயிதே மில்லத் கல்லூரிக்கு உத்தரவு!

Published:

12 Aug 05 High court - 2026

திமுக ஆட்சிக் காலத்தில் பட்டா போட்டு தூக்கிக் கொடுக்கப் பட்ட 30 ஏக்கர் வனத்துறை நிலத்தை மீண்டும் அரசிடமே ஒப்படைக்க காயிதே மில்லத் கல்லூரி நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுக ஆட்சிக் காலத்தின் போது, சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத் கலைக் கல்லூரி பயன்பாட்டுக்கு என, 40 ஏக்கர் நிலம் வழக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு கல்லூரி பயன்படுத்திய 10 ஏக்கர் நிலத்தைத் தவிர பயன்படுத்தாத 30 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், முதல்வர் ஜெயலலிதாவின் இந்த உத்தரவை எதிர்த்து, காயிதே மில்லத் கலைக் கல்லூரி நிர்வாகம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அரசின் உத்தரவுக்கு ஆதரவாக தனி நீதிபதி தீர்ப்பளித்தார். இருப்பினும் அந்தத் தீர்ப்பையும் எதிர்த்து, கல்லூரி நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்று வந்தது. நீண்ட விசாரணைக்குப் பின்னர் இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், காயிதே மில்லத் கலைக் கல்லூரி நிர்வாகம், தாங்கள் பயன்படுத்தாத 30 ஏக்கர் நிலத்தை மீண்டும் அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், கல்லூரிக்காக பயன்படுத்திய 10 ஏக்கர் நிலத்தை சுற்றி சுற்றுச் சுவர் எழுப்பவும், அது குறித்து ஆறு மாதத்தில் பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்தனர்.

Related articles

Recent articles

spot_img