tharkolai jumb - 2026சென்னையை அடுத்துள்ள காட்டாங்குளத்தூரில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. . இந்திய ஜனநாயக கட்சி தலைவர், எம்பி பச்சமுத்து இதன் சொந்தக்காரர்.

மருத்துவம், பொறியியல் உட்பட ஏராளமான படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. தவிர மிகப்பெரிய ஆஸ்பத்திரியும் இந்த வளாகத்துக்கு உள்ளே செயல்பட்டு வருகிறது.

இங்கு படிப்பவர்களில் பெரும்பாலானர் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள்தான். இதனால் இவர்கள் தங்குவதற்காக ஹாஸ்டலும் எஸ்ஆர்எம்முக்கு உள்ளது.jumb sus - 2026இந்நிலையில், தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள். கடந்த மாதம் பிடெக் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் மாணவி அனுப்ரியா 10-வது மாடியில் இருந்து குதித்துதற்கொலை செய்து கொண்டார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனுஷ் சௌத்ரி என்ற மாணவர் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

திரும்பவும் ஒரு தற்கொலை நடந்ததுள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவன் பெயர் ராகவன், கன்னியகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. ஐடி பிரிவில் 4-ம் வருடம் படித்து வந்துள்ளார்.srm univercity - 2026சனி, ஞாயிறு லீவு முடிந்து இன்று வழக்கம்போல் காலேஜ்க்கு மாணவன் வந்த நிலையில், தற்கொலை முடிவுக்கு வந்த காரணம் உடனடியாக தெரியவில்லை. ஆனால், இந்த ஒரு மாசத்தில் மட்டும் மாணவ, மாணவியரின் தற்கொலை 3-ஆக அதிகரித்துள்ளது. இந்நிகழ்வு பெற்றோர்களை, தங்கி படிக்கும் மற்ற மாணவர்களை மட்டுமல்லாமல், தமிழக மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending