குற்றாலத்தில் சுற்றுலாத்துறை சார்பில் படகு சவாரி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சுற்றுலா தமிழகம் நெல்லை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

IMG 20190727 125235 - 2026திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் – ஐந்தருவி  சாலையில் உள்ள வெண்ணைமடை குளத்தில் ஆண்டுதோறும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகு சவாரி நடத்தப்படும்.

இந்த ஆண்டு ஐந்தருவியில் குறைந்த அளவிலேயே தண்ணீர் விழுந்ததால் இக்குளத்துக்கு நீர்வரத்து வரவில்லை. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக ஐந்தருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் வெண்ணைமடை குளம் நிரம்பியது;

IMG 20190727 125219 - 2026இந்த நிலையில் குற்றாலத்தில் சுற்றுலாத்துறை சார்பில் படகு குளத்தில் படகு சவாரிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழச்சியில் சுற்றுலர் அலுவலர் சீதாராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், உதவி சுற்றுலர் அலுவலர்கள் நித்ய கல்யாணி, கண்ணன், தமிழ்நாடு சுற்றுலா வளாச்சி கழக மேலாளர் கருப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.