ஆடி அமாவாசை: தீர்த்தக் கட்டங்களில் ஹிந்துக்கள் புனித நீராடி முன்னோரை வழிபாடு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை மதுரை லைஃப் ஸ்டைல்

sathuragiri mahalingam - 2026

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஹிந்துக்கள் தீர்த்தக் கட்டங்களில் புனித நீராடி முன்னோரை வழிபட்டனர்.

ஆடிஅமாவாசையையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் பக்தர்கள் குவிய தொடங்கினர்.

மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்களுக்காக ஆங்காங்கே மருத்துவ முகாம்கள்  அமைக்கப்பட்டுள்ளன

ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தில் உள்ள ஆறுகள், கடல்களில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி வருகின்றனர்

குமரியில் அதிகாலை முதலே புனித நீராடி பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்

நெல்லை மாவட்டம் பாபநாசம் திருக்குற்றாலம் ஆகிய அருவிகளிலும் தீர்த்த கட்டங்களிலும் ஏராளமானோர் அதிகாலை முதலே திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.