இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாற்றுத்திறனாளிகள் வசதிகளை கூடிய இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் முன்பதிவு செய்தால் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.
இதனை அடுத்து, அதனை முன்பதிவில்லா பெட்டிகளாக மாற்றம் செய்ய பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தெற்கு ரயில்வே நிர்வாகம் இந்தப் பெட்டிகளில் முன் பதிவு செய்யாமல் பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது.
இதனை அடுத்து, நாளை மறுதினம் முதல் நாற்பத்தி ஒன்பது ரயில்களில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.