கமல் இன்ஸ்டன்ட் சாம்பார். ஃபுட்: ஜெயக்குமார்!

Published:

03 June27 Jeyakumar - 2026

கமல் இன்ஸ்டன்ட் சாம்பார். ஃபுட் மாதிரி திடீரென கருத்து கூறுவார். என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் நேற்றைய தினம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் கூறுகையில் அரசியலிருந்து மாணவர்கள் விலகியிருக்க கூடாது.

கரைவேட்டி கட்டியவர்களால் கறை ஏற்பட்டுவிட்டது. மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசியலில் ஒற்றை அறிவு, ஒற்றை முடிவு என்று இல்லாமல் பன்முகத் தன்மை உடையதாக இருக்க வேண்டும்.

தமிழக அரசியலில் இருந்து குடும்ப அரசியலை பிரிக்க முடியாது. ஆனால் குடும்பத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும். இதுதான் என் குடும்பம் (மாணவர்களை பார்த்து). நான் ஏதோ சின்ன பசங்களுடன் பேசி வருகிறேன் என கருத வேண்டாம்.

kamalkas - 2026

நான் பேசிக் கொண்டிருப்பது நாளைய தலைவர்களுடன் என்றார் கமல்ஹாசன்.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் கமல் இன்ஸ்டன்ட் சாம்பார். ஃபுட் மாதிரி திடீரென கருத்து கூறுவார். என்றார். மேலும் தேர்தல் நேரத்தில் மட்டுமே வருவார். அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போய்விடுவார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு. அந்த வீடே அலிபாபா குகை போல் உள்ளது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

வீட்டில் இருப்பவர்கள் பயந்து வெளியில் ஓடிவருகிறார்கள். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அரசு சார்பில் தடை கோர முடியுமா என கேட்கிறீர்கள். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் மூலம் ஆள்மாறாட்டத்தை கற்றுக் கொடுத்ததே கமல்தானே. இப்படித்தான் வாட்ஸ் ஆப்களில் உலா வருகிறது. கல்லூரி மாணவர்கள் மத்தியில் கமல் அரசியல் பேசுவது தவறு என்றார் ஜெயக்குமார்.

Related articles

Recent articles

spot_img