ஜெ-75-வது பிறந்தநாள் இன்று அவரது உருவச்சிலைக்கு இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை..

Published:

IMG 20230224 WA0041 - 2026

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும்,
அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும், முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அங்குள்ள கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், அதிமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1157465 eps 04 - 2026

முன்னதாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள இன்று அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளாராக எடப்பாடி பழனிசாமியை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நேற்று விசாரித்தது. அப்போது, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று அதிரடி உத்தரவிட்டது. இதன் மூலம் அதிமுக-வின் முழு கட்டுப்பாடும் எடப்பாடி பழனிசாமி வசமாகி உள்ள நிலையில் அவர் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட வந்தபோது நிர்வாகிகள் தொண்டர்கள் பலத்த வரவேற்பு கொடுத்தனர்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img