
சென்னை:
தமிழக சட்டப்பேரவையில், இன்று காலை அமைச்சர் செல்லூர் ராஜு பேச எழுந்தபோதும், அவர் பேசும்போதும், அவரை தெர்மாகோல், தெர்மாகோல் என்று எதிர்க்கட்சியினரான திமுகவினர் கலாய்த்தபடி கோஷம் எழுப்பினர்.
திமுக எம்.எல்.ஏ.க்களின் கோஷத்தால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
வைகை அணையில் நீர் ஆவியாகி குறையாமல் தடுக்க, தெர்மகோல் கொண்டு மூடும் திட்டத்தை அமைச்சர் செல்லூர் கே.ராஜு அண்மையில் செயல்படுத்தியதும், அவர் திரும்புவதற்குள் தெர்மகோல் அட்டைகள் கரை திரும்பியதும், அவரின் இந்தச் செயலைக் கலாய்த்து, சமூக ஊடகங்கள், டிவி.,க்கள், ஊடகங்களில் கருத்துகள் பரவியதும் குறிப்பிடத்தக்கது.



